
அடுத்தகட்ட தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்! அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த பெஞ்சமின் நெதன்யாகு
அமெரிக்காவை தாக்கக்கூடிய அணு ஆயுத ஏவுகணையை ஈரான் உருவாக்கிவருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, Ben Shapiro-வுடன் நடத்திய நேர்காணலிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “ஈரான் 8,000 கி.மீ. தூரம் செல்லக்கூடிய ICBM ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. மேலும், 3,000 கி.மீ. சேர்த்தால் அமெரிக்காவின் கிழக்கு கரையை அடைய முடியும்” என எச்சரித்துள்ளார்.
இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள அதிரடி தடை…!
“அமெரிக்காவின் நியூயார்க், பாஸ்டன், வாஷிங்டன், மியாமி போன்ற நகரங்களை அணு ஆயுதங்களால் மிரட்டும் நிலைக்கு ஈரான் வருகிறது.
“அமெரிக்காவிற்கு மரணம்’ என கோஷமிடுபவர்கள் ஏவுகணை ஆயுதங்களை வைத்திருப்பது மிகப்பெரிய அபாயம்” என்றும், இஸ்ரேல் அந்த அபாயத்தை தடுக்கும் பணியில் சிறப்பாக செயல்படுகிறது.

மேலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் முக்கியத்துவத்தை நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் உருவாக்கும் பாதுகாப்பு ஆயுதங்கள் உலகிலேயே மிக மேம்பட்டவை.
இவை அமெரிக்காவுடன் பகிரப்பட்டுள்ளன. ISIS மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளால் ஏற்படும் விமான தாக்குதல்களை இஸ்ரேல் புலனாய்வு தடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
காசா போர் குறித்து பேசுகையில், “இது முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால், ஹமாஸ் ஆட்சி தொடரும் வரை நிச்சயமாக முடிவடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
You may also like


யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அதிரடி கைது…

கொழும்பில் எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா கைது
Archives
Calendar
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
Leave a Reply