Day: September 29, 2025

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு – படுகாயங்களுடன் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில்!
இன்றையதினம் கிளிநொச்சி – தட்டுவான்கொட்டியில் காலை 11:30 மணியளவில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இரு நபர்கள் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது. இதன்போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Times News Tamil – உங்கள் புதிய தமிழ் செய்தி வலைத்தளம் அறிமுகம்
செப்.29 (Times News Tamil) – இன்று அதிகாரப்பூர்வமாக Times News Tamil (timesnews.yarlit.com) என்ற புதிய தமிழ் செய்தி வலைத்தளம் அறிமுகமாகிறது. இந்த வலைத்தளம் மூலம் உங்களுக்கு உடனுக்குடன் அரசியல், சமூக, விளையாட்டு, தொழில்நுட்பம் மற்றும் உலகச் செய்திகள் அனைத்தும் தமிழ் மொழியில் தரப்படும். நம்பகமான செய்திகளை விரைவாகவும் தெளிவாகவும் வழங்குவதே எங்கள் முக்கிய குறிக்கோள்.

கொழும்பில் எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா கைது
கொழும்பு, செப்.29 (Times News Tamil) – எம்.பி. ராமநாதன் அர்ச்சுனா இன்று (29) காலை கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க வந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இக்கைது சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற சத்தியக்கிரகத்தில் பங்கேற்ற பிறகு, அவர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியை திட்டியதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடையதாகும். பொலிஸார் தெரிவித்ததாவது, குறித்த வழக்கைச் சுற்றிய மேலதிக விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒருவருக்கு ஒருவரை தள்ளிக்கொண்ட மக்கள்.. கரூர் சம்பவத்தின் முன் நடந்த பேரதிர்ச்சியான விடயங்கள்!
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பிரசாரத்தில் கலந்துகொள்ள முன்னரே அவரது கட்சி தொண்டர்கள் அங்கு உரையாற்றியுள்ளனர். அப்போதே ஒலிவாங்கிகள் சரியாக வேலை செய்யவில்லை என கூட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஆளும் திமுக கட்சியின் சூழ்ச்சியாக இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அரசாங்கம் சரியான இடத்தை ஒதுக்கி தராததாலேயே இந்த துயர சம்பவம் நடந்ததாக மற்றுமொரு தொண்டர்